2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்படும் என தீர்மானம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ்.மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி சுவிகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பது எனவும் காணி சுவீகரிப்பு தொடர்பாக அரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும் எனவும் தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூடட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் காணி சுவீபரிப்பினைத் தானும் எதிர்ப்பதாகக் கருத்து வெளியிட்டார்.

இதனால் குறித்த விடயத்தினை ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--