2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

போலி முத்திரை ஆவணங்கள் : ஐவருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்கள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று (22) உத்தரவிட்டார்.


பொலிஸாரிற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனந்தபுரத்திலுள்ள வீடொன்றினைச் சோதனைக்குட்படுத்தியபோது, போலியான முத்திரை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


இதன்போது சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்த ஐவரும் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து இன்று (22) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .