2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

350 லீற்றர் கசிப்புடன் இளைஞன் கைது

Thipaan   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி, கட்டைக்காடு, நித்தியாவட்டைப் பகுதியில் கசிப்பு காய்ச்சிய 25 வயதுடைய இளைஞனை, புதன்கிழமை (29) கைது செய்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 350 லீற்றர் கொள்ளவுடைய இரண்டு பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற போது சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .