2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

1 மில்லியன் அமெரிக்க டொலருடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் 1 மில்லியன் பெறுமதியான அமெரிக்க நாணயத்தாள் ஒன்றினை வைத்திருந்த இருவர், வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர் என மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ் தெரிவித்தார்.

கைதான இருவரும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 40 வயதுடைய நபர்கள் ஆவர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சந்தேக நபர்களிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் அவர்களின் உடமையில் மறைத்து வைத்திருந்த நாணயத்தாள் ஒன்றினையும் மீட்டிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட நாணயத்தாள் ஒன்றில் 1 மில்லியன் டொலருக்குரிய பெறுமதி அச்சிடப்பட்டுள்ளது. கைதான இருவரும் அந்நாணயத்தாளினை மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவரும் பொலிஸார், விசாரணைகள் நிறைவு பெற்றதும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .