2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

5G குறித்து ஆராய குழு நியமனம்

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த்  அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரால், பிரதேச சபைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, சபையில் உள்ளவர்களுடைய கருத்துகளுக்காக இடமளிக்கப்பட்டது.

இந்நிலையில் சபையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, மேற்படி குழுவை நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .