2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

600 முஸ்லிம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீளகுடியேறியுள்ளன

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த கால யுத்ததின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 வருடங்களின் பின்னர் தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இவர்களில் சிலர் தமது சொந்த இடங்களிலும் பலர் பொது இடங்களிலும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ் நகரப்பகுதியிலும் சிறிய எண்ணிக்கையானோர் சாவகச்சேரி பகுதியிலும் தங்கியுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள  தமிழ் குடும்பங்களுக்கு வழங்குவது போல்,  இந்த முஸ்லிம் குடும்பங்களுக்கும் மீள்குடியேற்ற உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--