2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

ஓவியர் வீரசந்தானம் காலமானார்

Editorial   / 2017 ஜூலை 14 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ்பெற்ற ஓவியர் வீரசந்தானம், உடல்நலக் குறைவு காரணமாக, தனது 71ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.

தமிழ் தேசிய உணர்வாளராக திகழ்ந்த இவர்,  தமிழில் பிட்சா, அரவாண், கத்தி உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு,  நேற்று மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீரசந்தானத்தின் மறைவுயொட்டி, இந்திய திரையுலகப் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்த இவர், மும்பையைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றினார். அதில் நல்ல சம்பளம் கிடைத்த போதிலும், தமிழர்களுக்காக போராடும் எண்ணத்தில் அந்த வேலையை விட்டு விலகினார்.

தஞ்சாவூரிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை தனது ஓவியத் திறமையால் மிகத் தத்ரூபமாக இவர் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .