2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இளவரசர் வில்லியமுக்கு பேசப்பட்ட இளவரசி தியோடரா நடிகையானார்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கு பேசப்பட்ட இளவரசி தியோடரா, உலக அளவில் பிரபலமான 'தி போல்ட் அன்ட் பியூட்டில்' தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

தந்தை கிரேக்க நாட்டு முன்னாள் மன்னர் 2ஆவது கான்ஸ்டான்டைன் மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இளவரசி ஆன் மேரி ஆகியோரின் புதல்வியான தியோடரா, 1983ஆம் ஆண்டு பிறந்தவர். 29 வயதான இவர் லண்டனில்தான் வசித்து வருகிறார்.

சிறு வயது முதலே லண்டனில் வசித்து வந்த தியோடராவுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள்தான் இளவரசர்கள் வில்லியமும், அவரது தம்பி ஹரியும்.

ஒரு கட்டத்தில் தியோடராவுக்கு, வில்லியமை திருமணம் செய்துவைக்க வில்லியமின் பாட்டியான ராணி எலிசபெத் யோசித்து வந்தாராம். ஆனால் என்ன காரணத்தாலோ அது கைகூடவில்லையாம்.

வில்லியமுக்கும், கேட் மிடில்டனுக்கும் திருமணம் நடந்தபோது அதில் தியோடரா கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்ததால் கலந்துகொள்ள முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு நடிகையாக அவதாரம் எடுத்துள்ள தியோடரா, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரான 'தி போல்ட் அன்ட் பியூட்டிபுல்' தொடரில் நடித்து வருகிறாராம்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தியோடரா இளவரசர் வில்லியமை திருமணம் செய்யாதல் போனமைக்கு வருத்தம் இல்லை என்றும் உண்மையில் தான், வில்லியம், ஹாரி ஆகியோர் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். எங்களுக்குள் திருமணம் குறித்தெல்லாம் எந்த சிந்தனையும் இருந்ததில்லை. எனக்கும், வில்லியமுக்கும் திருமணம் செய்து வைக்க ராணி யோசித்தார் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .