2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பிங்கி ஓர் ஆண்; மருத்துவ பரிசோதனைகளில் உறுதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியரான பிங்கி பிரமாணிக் உண்மையில் ஓர் ஆண் என்பது மருத்துவ மற்றும் பாலின பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து பிங்கி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிங்கி, கடந்த 2006ஆம் ஆண்டு டோகா நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
 
தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததாகவும் பணத்தை மோசடி செய்ததாகவும் அவருடன் இருந்த பெண்ணொருவர் முறைப்பாடு செய்தார்.

அதன் அடிப்படையில் பிங்கி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர் 26 நாட்களுக்கு பின் விடுதலையானார். இருப்பினும், அவர் ஆணா? அல்லது பெண்ணா என்பது தொடர்பில் அறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து அவருக்கு பாலின சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையிலேயே அவர் ஆண் என்பது உறுதியாகியுள்ளது.

பிங்கி பிரமாணிக் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் போட்டிகளில் புகழ்பெற்ற இந்திய வீராங்ககனையாவார். 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் அவர் 3 தங்கப்பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவருடம் பொதுநலவாய விளையாட்டு விழாவிலும் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 3 வருடங்களுக்கு முன்னர் அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலேயே மேற்படி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்நிலையில், அவர் போட்டிகளில் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

  • nawas Thursday, 22 November 2012 05:06 PM

    என்னையா? நடக்குது இங்கே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .