2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

காந்தியின் கடிதங்கள் லண்டனில் ஏலம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தி எழுதிய இரு கடிதங்கள் லண்டனில் உள்ள 'சோத்பை' ஏல விற்பனை நிறுவனத்தால் ஏலம் விடப்படவுள்ளன. இந்த ஏலம் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

1922ஆம் ஆண்டு சபர்மதி சிறையிலிருந்த மகாத்மா காந்தி, இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் துவி ஜேந்திர நாத்துக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். 'யங் இந்தியா' என்ற அமைப்புக்கு துவி ஜேந்திர நாத் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

பென்சிலால் 2 பக்கங்களில் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. இது 6 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை. தனது நண்பர் ஒருவரின் தாயார் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து மகாத்மா காந்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதமும் 3 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் போகும் என கருதப்படுகிறது.

இவை தவிர 1950ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்பின் முதல் பதிப்பு ஒன்றும் ஏலத்தில் விடப்படுகிறது. அதில், அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஷேக்ஸ்பியரின் 'கலிவரின் பயணம்' உள்ளிட்ட பல்வேறு அரிய இலக்கிய நூல்களும் ஏலம் விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மாலைமலர்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .