2021 மே 06, வியாழக்கிழமை

இந்திய சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் காலமானார்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் தனது 92ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை மாலை இவர் காலமானார்.

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இசையை மேற்கத்தேய உலகிற்கு கொண்டுசென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இவர் தனது இறுதிக்காலம்வரை இசையுலகில் ஆர்வமாக இருந்துவந்தார்.

ஏற்கெனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் தற்போது மீண்டும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இவரின் மகள் அனோஷ்கா சங்கரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. (தட்ஸ் தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .