2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

ஒஸ்கார் விருது வென்ற ஹொலிவூட் கலைஞர் மரணம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 02 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிங்காங்' மற்றும் 'பெல்லோஷிப் ஆப் தி ரிங்' போன்ற திரைப்படங்களுக்காக ஒஸ்கார் விருது பெற்ற மைக் ஹப்கின்ஸ் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

மைக் ஹாப்கின்ஸ், 'லார்ட் ஆப்தி ரிங்ஸ்' திரைப்படத்தில் சவுண்ட் எடிட்டராக பணியாற்றினார். நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவரான அவருக்கு வயது 53.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான 'கிங் காங்' மற்றும் 2006ஆம் ஆண்டு வெளியான 'பெல்லோஷிப் ஆப் த ரிங்க்' ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்ததற்காக ஒஸ்கர் விருது வென்றவர்.

இந்த விருதினை தன்னுடன் பணியாற்றிய ஈத்தன் வேன் டர் ரைன் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், நியூசிலாந்தின் வடக்கு தீவுப் பகுதியில் உள்ள ஆற்றில் சிறு படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்து விழுந்தவர், மூழ்கி உயிரிழந்துள்ளார். 

'பல புகழ்பெற்ற உலக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் ஆகியோர் ஹாப்கின்ஸ் உடன் பணியாற்றியுள்ளனர். அவர்கள் மைக்கை இழந்து வாடுவார்கள்' என்று இயக்குநர் பீட்டர் ஜாக்சன் கூறியுள்ளார்.

மேலும், மைக் மற்றும் ஈத்தன் ஆகியோர் 'டிரான்ஸ்பார்மர்ஸ்' திரைப்படத்திற்காக இந்த ஆண்டின் ஒஸ்கர் விருது பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .