2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

செவ்வாயை கடந்த 'பனிப்பந்து'

George   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இராட்சத வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 2.27 மணியளவில் கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

சி-2013 ஏ என்ற ஒரு சிறிய மலை அளவிலான இந்த வால் நட்சத்திரத்துக்கு சைடிங் ஸ்பிரிங் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரமானது மணிக்கு 2 இலட்சத்து 3 ஆயிரம் கி.மீட்டர் அதிவேகத்தில் கடந்து சென்றதாகவும் செவ்வாய் கிரகத்தில் இருந்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 500 கி.மீட்டர் தூரத்தில் சென்றதாகவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பூமி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் 3 மடங்கு தூரமாகும். செவ்வாய் கிரகத்தை கடந்து சென்ற போது இந்த வால் நட்சத்திரம் புகையையும், துகள்களையும் வெளியேற்றியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் ஒடிசி, மாவென் உள்ளிட்ட 3 விண்கலன்களை நாசா அனுப்பியுள்ள நிலையில் இந்த வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை கடப்பதால் இந்த விண்கலன்கள் மீது மோதி அவை சேதமடையும் என கருதப்பட்டது.

ஆனால் அவை செவ்வாய் கிரகத்தின் பின்புறத்தில் பாதுகாப்பாக சுற்றி பறந்ததால் அதன் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளன.

இதேவேளை, செவ்வாய்க்கிரகத்தை இந்த நட்சத்திரம் 10 இலட்சம் ஆண்டுக்கு ஒரு முறை கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .