2021 ஜனவரி 27, புதன்கிழமை

பூமியை விட 7 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்வெளியில் எச்.டீ 40307 நட்சத்திரத்தை சூழ அமைந்துள்ள 3 கிரகங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்த விஞ்ஞானிகள், தற்போது மற்றுமொரு கிரகத்தையும் கண்டுபிடித்ததாக அறிவித்து விடுத்துள்ளனர்.

பூமியை விட ஏழு மடங்கு பெரிய இந்த கிரகம், சூரியனில் இருந்து பூமி காணப்படும் தொலைவிலேயே அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இக்கிரகத்திலும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோனா தெரிவித்துள்ளார்.

மேலும், எச்.டீ 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் இரண்டு புதிய கிரகங்கள் உள்ளதாகவும் அவை தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .