Gavitha / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர
பல்லம மதவக்குளம் பகுதியில், எட்டு ஆமைகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு புத்தளம் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நட்சத்திர ஆமைகள் என்று கூறப்படும் எட்டு ஆமைகளை, இவர் வீட்டில் வைத்து வளர்ந்து வந்துள்ளார். இந்த எட்டு ஆமைகளும் தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர் மீதான வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.






4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago