Princiya Dixci / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
இயந்திரப் படகின் 97,000 ரூபாய் பெறுமதியுடையஇயந்திரமொன்றைத் திருடிய குற்றச்சாட்டில், வன்னாத்தவில்லு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இருவரையும், ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள மீனவர் ஒருவர் தனது இயந்திரப்படகின் இயந்திரமொன்று காணாமல் போயுள்ளதாகவும் அதனை புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே திருடிச் சென்றுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் திருட்டுச் சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார், புத்தளம் வன்னாத்தவில்லுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்த வன்னாத்தவில்லு பொலிஸார், சந்தேகநபர்களின் வீட்டை சோதனையிட்ட போது, வீட்டு வளவுக்குள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் திருட்டுப் போயிருந்த இயந்திரத்தை மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், புத்தளத்திலிருந்து பொருட்களைத் திருடி மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதுடன், அங்கிருந்து பொருட்களைத் திருடிக்கொண்டு புத்தளத்தில் விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர்கள் மீது புத்தளம் நீதிமன்றில் இயந்திரப்படகுடைய இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கொன்று உள்ள நிலையில், மீண்டும் அதே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும், எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025