2021 மே 06, வியாழக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம் - கொழும்பு வீதி பௌத்த மத்திய நிலையத்துக்கு அருகில் உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களின் உண்ணாவிரதம், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் வாக்குறிதியையடுத்து நேற்று வியாழக்கிழமை (19) கைவிடப்பட்டது. 

புத்தளம் - கொழும்பு வீதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்ட கட்டட மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தமக்கு நிரந்தர இட அமைப்புகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த திங்கட்கிழமை (16) ஆரம்பித்தனர்.

3 நாட்களாகத் தொடர்ந்த இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் புதன்கிழமை (18) மாலை சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையிலே குறித்த உண்ணாவிரதக் களத்துக்கு நேற்று விஜயம் செய்த, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் வாக்குறிதியையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. 

இதேவேளை, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் கருத்து தெரிவிக்கையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்ட இடங்களுக்கு மாற்றிடம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .