2021 மே 15, சனிக்கிழமை

வரவு - செலவுத்திட்டத்தில் கல்விக்கு கூடுதல் நிதி

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற வரவு - செலவுத் திட்டத்தில் 18 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.  கடந்த கால ஆட்சியாளர்கள் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆறு கோடி ரூபாவை மட்டுமே கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்கள் என்று குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினரும் பிங்கிரிய தேர்தல் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளருமான நளீன் பண்டார தெரிவித்தார்.

நாட்டின் கல்வியை மேம்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கல்வியமைச்சரான அகில விராஜ் காரியவசமும் கூடுதலான கவனம் செலுத்தியுள்ளனர்.  

குளியாப்பிட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட யகம்வெல முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா, பாடசாலை மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது. 

அதிபர் அஷ்ஷெ;ய்க்  ஏ.எல்.எம். அஷ்ரப்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, குளியாப்பிட்டிய கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.ஜீ. அஷ்ரப், சபீயா அறக்கட்டளை நிறுவகத்தின் தலைவர் சாபீர் மன்சூர். சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் உவைஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .