2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வில்பத்து தேசிய பூங்காவுக்கு விஜயம் செய்த நா.உ நவவி

Princiya Dixci   / 2016 மார்ச் 02 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

வில்பத்து தேசிய பூங்காவின் எழுவன்குளம் பிரதேச நுழைவாயில் ஊடாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, கடந்த திங்கட்கிழமை (29) விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

சுற்றுலாப் பயணிகளை புத்தளம் - மன்னார் வீதி ஊடாக வரவழைத்து எழுவன்குளம் நுழைவாயில் ஊடாக பிரவேசிக்கச் செய்யும்  பொருட்டு வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் இதற்கென புதிய காரியாலயத்தை அமைப்பது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு ஆராய்ந்தார்.

இது தொடர்பாக  அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

வில்பத்து பூங்காவுக்கு தெற்கிலிருந்து வருகை தருபவர்கள் அநுராதபுரம் ஊடாகவே செல்கின்றனர். இதனை எழுவன்குளம்  நுழைவாயில் ஊடாக வரவழைப்பதன் மூலம் அவர்களின் பயணம் இலகுவாக்கப்படுகிறது.

இது தொடர்பாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஜயவிக்கிரம பெரேராவின் கவனத்துக்குக்கொண்டு வந்துள்ளோம்.

வில்பத்து தேசிய பூங்கா, வடமேல் மாகாணத்துக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது. எனினும், வடமத்திய மாகாண சபையே இதனை நிர்வகித்து வருகிறது. இது தொடர்பாகவும் பரிசீலிக்க உள்ளோம்.

கல்பிட்டிப் பிரதேசம் சுற்றுலாப் பிரதேசமாக அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை படகுகளின் மூலம் கடல் வழி பயணமாக கங்கை வாடிக்கு வரவழைத்து எழுவன்குளம் நுழைவாயில் ஊடாக பிரவேசிக்கச் செய்யவுள்ளோம் எனக்கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--