2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்கு 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு

Super User   / 2010 நவம்பர் 04 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

கட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக கட்டகஸ்திகிலிய பிரதேச சபைத் தலைவர் காமினி ஜயசேகர தெரிவித்தார்.

கட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இந்நிதி வழங்கப்படவுள்ளதோடு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 2.5 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீதிககளுக்கு கொங்கிரீட் இடல், பாலம் மற்றும் கட்டிடங்கள் அமைத்தல் என்பன இந்நிதியினால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--