2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் வீடுகளற்றவர்களுக்கு உலக வங்கி நிதியுதவி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( இர்ஷாத் றஹ்மத்துல்லா )
                          
புத்தளம் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற 575 உள்ளூர் பயனாளிகளுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான நிதி உதவிகளை உலக வங்கி வழங்கியுள்ளதாக உலக வங்கியின் புத்தளம் மாவட்ட வீடமைப்பு திட்ட பணிப்பாளர் பொறியிலாளர் எஸ்.எம்.யாஸீன் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கல்பிட்டி, புத்தளம், வண்ணாத்திவில்லு,முந்தல் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் குடும்பங்கள் தமது வீடுகளை நிர்மாணி்த்துக் கொள்ளும் முகமாக  முதற்கட்ட கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ள மக்களுக்கான ஆலோசனைகள் தொடராக வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இப்பணிகள் குறித்து கண்டறியவென புத்தளம் சேனைக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தமது அதகாரிகள் சகிதம் நேற்று புதன்கிழமை மாலை  சென்று பார்வையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கிராமங்களை மையப்படுத்தி பல உட்கட்டமைப்பு வசதிகளை உலக வங்கி வீடமைப்புத் திட்டம் மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் 60 ஆயிரம் லீற்றர் நீரை சேமித்து வைக்கக் கூடிய 7 நீர் தாங்கிகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 3 தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென 17.2 பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .