2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வயம்ப கல்கலைக்கழகத்தின் பரீட்சைகளுக்கு மாணவர்களை அனுமதிக்க முடிவு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மும்தாஜ்)

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த வயம்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குரிய பரீட்சைகளுக்கு தோற்ற மாணவர்களை இடமளிப்பதற்கு நிருவாக சபை முடிவு செய்துள்ளது.

வர்த்தக மற்றும் விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேறு வேறாக திகதி வழங்கப்பட்டு, வளாகத்திற்கு அழைத்து குறித்த இரு பீடங்களுக்கான பரீட்சைகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வளாகத்தின் பதிவாளர் காமினி ஏகநாயக்கா தெரிவித்தார். இதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2009 மற்றும் 2010 கல்வியாண்டுக்காக விஞ்ஞான பீடத்திற்கு பதிவு செய்துள்ள புதிய மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த குறுகிய ஆங்கில மற்றும் கணினி வகுப்புக்கள், வளாகம் மூடப்பட்டதைத் தொடர்ந்து தடைப்பட்டதுடன் அந்த கற்றல் நடவடிக்கைகள் வரும் திங்கட்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டி வளாகத்தின் புதிய பிரதான மண்டபத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் பதிவாளர் காமினி ஏகநாயக்கா மேலும் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டி வளாகத்தில் இரு மாணவக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அப்பல்கலைக்கழகம் காலவறையரையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .