2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

சம்பளம் வழங்கப்படாமையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஸீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாண அபிவிருத்தி சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குமாறு வேண்டி சாலிபுர பிரதேசத்தில் கடந்த 28ஆம் திகதி ஆம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்று 16 நாட்களைக் கடந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் இதுவரையில் பொறுப்புவாய்ந்த எந்தவொரு அதிகாரியும் இவ்விடம் தொடர்பாக செவிசாய்க்கவில்லை என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

இதுவரையில் 80 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காமையினால் தாம் பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் இதனை கருத்திற்கொண்டு சம்பளத்தை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .