2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பாடசாலைகளுக்கு புதிய நூலகங்கள்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

வடமேல்  மாகாண  சபை  உறுப்பினர்  ஏ.எச்.எம். ரியாஸின் வேண்டுகோளின் பேரில் கடையாமோட்டை முஸ்லிம்  மகா  வித்தியாலயத்திற்கு  புதிய  நூல்  நிலையமொன்றும்,  வடமேல்  மாகாண  சபை  உறுப்பினர்  எஸ்.ஏ.எஹியாவின்  வேண்டுகோளின்   பேரில்  புத்தளம்  பாத்திமா மகளிர் மகா  வித்தியாலயத்திற்கு  புதிய நூல் நிலையமொன்றும் வடமேல் மாகாண  சபையினால்  நிர்மாணிக்கப்படவுள்ளன.

வடமேல்  மாகாண  சபை  உறுப்பினர்  ஏ.எச்.எம். ரியாஸின்  நிதி  ஒதுக்கீட்டில்  கணமூலை முஸ்லிம் வித்தியாலயத்திற்கு  ஒரு  இலட்சம்  ரூபா  பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

வடமேல் மாகாண சபை உறுப்பினர்  எஸ்.ஏ.எஹியாவின்  வேண்டுகோளின் பேரில்  அஸன் குத்தூஸ் பாடசாலைக்கு மாணவர்களுக்கான  தளபாடங்ளும்   ஆசிரியர்களுக்கான  தளபாடங்களும் வடமேல் மாகாண சபையினால் வழங்கப்படவுள்ளன. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--