2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர் நிர்வாக தெரிவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

1990ஆம் ஆண்டு இடம் பெயர்வின் பின்னர் பல பாகங்களிலும் உள்ள யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும் நீர்கொழும்பு பெரிய முல்லை விஸ்டம் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

1990ஆம் ஆண்டுக்கு முன்னர் பதவி வகித்த பழைய மாணவர் சங்க பிரதி தலைவர் எம்.சீ.அபூபக்கர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. புதிய நிர்வாகக் குழு தலைவராக பாடசாலையின் அதிபர் எம்.எம்.முபாரக் தெரிவு செய்யப்பட்டதுடன் பின்வருவோர் பதவி நிலைகளுக்கு தெரிவானார்கள்.

உப-தலைவராக.எம்.சலீன், பிரதித் தலைவர்களாக.ஏ.எம்.சிபத்துல்லாஹ், எம்.பீ.ஏ.றவூப், செயலாளராக எம்.எஸ்.ஜஹான்கீர், உப-செயலாளராக எஸ்.எச்.முத்தலீப், பொருளாலராக எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட 40 போ்கள் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .