2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

மரண வீட்டிற்கு சென்ற யுவதியை பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞன் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

மரண வீடொன்றிற்குச் சென்றிருந்த யுவதியொருவரை பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச்  தெரிவிக்கப்படும் இளைஞரை சிலாபம் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைஞர் 24 வயதுடையவர் எனவும்இ பாதிக்கப்பட்ட யுவதி 16 வயதுடையவர் எனவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

ஆராச்சிக்கட்டு பஹல அத்தன்கனே பிரதேசத்தைச் சேர்ந்த  குறித்த யுவதி மரண வீடொன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கு சந்தேக நபரான இளைஞரை சந்தித்துள்ளார். பின்னர் முக்கிய விடயமொன்று பேசவுள்ளதாகத் தெரிவித்து சந்தேக நபர் யுவதியை அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும்இ  அன்று முதல் ஒரு வாரமாக இவ்வாறு யுவதியை பயமுறுத்தி இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சந்தேக நபரான இளைஞர் கைதுசெய்யப்பட்டதுடன்இ குறித்த யுவதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளாளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--