2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ரிதிகம காரீய உற்பத்தி நிறுவனத்துக்கு அமைச்சர் றிசாட் நேரடி விஜயம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கைத்தொழில், வணிக அமைச்சின் கீழ் இயங்கும் குருநாகல்இ ரிதிகம காரீய உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்டறியவென அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர் ஜயரட்ண ஹேரத் ஆகியோர் இன்று நேரடி விஜயமொன்றை மேற்கொண்டனர்.

2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்இ இதற்கு முன்னர் சில காலங்கள் மூடப்பட்டிருந்தது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது இலாபமீட்டும் நிறுவனமாக இது மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவா் சட்டத்தரணி டி.கலன்சூரிய தெரிவித்தார்.

102 ஏக்கா் நிலப்பரப்பை கொண்ட இந்த காரியச் சுரங்கம் வடமேல் மாகாணத்தில் மாதுராகொடஇ தொடங்கஸ்லந்த என்னுமிடத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. 2000 அடி ஆழத்திற்கு காரியத்தை பெறும் சுரங்க அகழ்வு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 81 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம் தற்போது 100 மெட்ரிக் தொன் காரியத்தை பெறக்கூடிய அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

2003ஆம் ஆண்டு இந்நிறுவனம் மூடப்படும் போது 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றியதுடன் 200க்கும் அதிகமான தொழிலாளா்கள் சுரங்கத்தினுல் பணியாற்றினா். இதில் பணிபுரிந்த ஊழியா்களுக்கு அமைச்சரவையின் விஞ்ஞாபனத்தின் மூலம் நஷ்டயீடுகள் வழங்கப்பட்டன.
2007ஆம் ஆண்டு

பிரான்ஸ் நாட்டிலிருந்து 19 மில்லியன் ரூபா பெறுமதியான மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டு சுரங்கத்துக்கு தேவையான மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. காரிய ஏற்றுமதியானது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. 2007 ஆண்டு 517 மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது நிறுவனம் 88 மில்லியன் ரூபாய்களை இலாபமாக பெற்றுவருகின்றது.

நிறுவனத்துக்கு சொந்தமான காணியில் 75 ஏக்கரில் தற்போது தென்னை பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனது முதலாவது கன்றை அமைச்சர் றிசாட் பதியுதீன் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--