2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

மின்சாரம் தாக்கிய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் நகரில் அமைந்துள்ள கடை ஒன்றில் தொழில் புரிந்து வந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு ஏழு மணியளவில் குறித்த இளைஞன் கடையில் இருந்த சமயம் மின்சார வயர் ஒன்றினைக் கழற்ற முயற்சித்த போது மின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். உடனடியாக இவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம், ரத்மல்கார எனும் இடத்தைச் சேர்ந்த 22 வயதான சுஜித் சஞ்ஜீவ எனும் இளைஞரே இவ்வாறு உயிரிந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .