2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தும்பு ஆலையை தீ வைத்த பொலிஸ் உத்தியோகத்தர் சரணடைந்தார்

Super User   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

மதுரங்குளியில் அமைந்துள்ள   தும்பு ஆலையை   தீ வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்  இன்று காலை சரணடைந்தார்.

மதுரங்குளி விகாரைக்கு அருகிலுள்ள தும்பு ஆலை உரிமையாளருக்கும் குறித்த  பொலிஸ் உத்தியோகஸ்தருக்குமிடையே   தனிப்பட்ட காரணத்திற்காக  வாக்குவாதம் ஒன்று உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து  குறித்த  பொலிஸ் உத்தியோகத்தர் தனது தும்பு  ஆலைக்கு தீ வைத்ததாக தும்பு ஆலை உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தீயினால் தும்பு ஆலையின் ஒரு பகுதியும் ஆறு லொறி கொள்ளவான தும்பும் சேதமடைந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .