2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

புத்தளம் தொகுதி பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகள் கௌரவிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

2010 தரம்  5  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டனர்.  

புத்தளம் பொலிஸ் தொகுதி  சேவா வனிதா பிரிவினால் ஏற்பட்டு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு புத்தளம் க்றீன் கார்டன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.  

சேவா வனிதா  பிரிவு தலைவி திருமதி தர்மசேனவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   புத்தளம்  மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  ரவி விஜேகுணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம். தர்மசேன உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் அதிதிகளாக கலந்து  கொண்டனர்.

நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த புத்தளம் பொலிஸ் தொகுதி  பொலிஸ் நிலையங்களில் கடமைபுரியும்   பொலிஸ் உத்தியோகஸ்தர்களின்  பிள்ளைகள் 13 பேர்  தரம் 5  புலமைப்பரிசில்   பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .