2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி அடுத்த வாரம் முதல் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 26 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

இலங்கையின் முதலாவது அனல்மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திப் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்நிலையத்தின் ஊடாக 300 மெகா வோட் மின் உற்பத்தி அடுத்த வாரம் முதல் தேசிய மின் உற்பத்தியுடன் சேர்க்கப்பட உள்ளது.

சீன அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் மொத்தம் 900 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

300 மெகா வோட் அளவு கொண்ட மூன்று கட்டங்களில் இந்த மின் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதுடன் இதன் முதலாம் கட்ட நிர்மானப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

அடுத்த கட்ட நிர்மானப்பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சொலை அனல் மின்நிலையத்தின் முழுமையான நிர்மானப்பணிகள் வரும் 2014ஆம் ஆண்டில் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--