2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்வோரை கைது செய்ய பணிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

ராஜாங்கனை லுனுஓயா, பனிக்கம் அலை, கலாஓயா ஆகியவற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகளை மேற்கொள்வோரை  கைது செய்யுமாறு அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இப்பிரதேசங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதினால் சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாங்கனை திட்டத்தின் வாய்க்கால் மற்றும் வீதிகள் பல இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போதிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகளினால் வீதிகளும் பாரியளவில் சேதமுற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X