2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புத்தளம் ஜமாத்தே இஸ்லாமிய சமூக விவகார பிரிவின் விழிப்புணர்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் நகரசபையை புத்தளம் மக்களின் நலன் காக்கும் நல்லாட்சி மன்றமாக மாற்றுவதற்கு வேட்பாளர்களும் வாக்காளர்களும் ஆற்றிய பணிகளும் பொறுப்புக்களும் தொடர்பாக புத்தளம் ஜமாத்தே இஸ்லாமிய சமூக விவகார பிரிவு, புத்தளம் பேல்ஸ் வீதி மைதானத்தில் விழிப்புணர்வுக் கூட்டமொன்றை நடத்தியது.

புத்தளம் வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய இயக்கமொன்று இவ்வாறான அரசியல் தொடர்பான கூட்டமொன்றை நடத்தியுள்ளது.

விழி என்னும் சஞ்சிகையொன்றும் நேற்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை ஆசிரியர் எம்.எச்.எம்.நதீர் வெளியிட்டு வைத்தார்.

இம்முறை புத்தளம் நகரசபைக்கு போட்டியிடும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பந்து சின்னத்திலான சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர். உள்ளுராட்சிமன்ற நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எஸ்.ஏ.சீ.பி.மரைக்கார் கவிதை வடிவில் சமர்ப்பித்தார். புத்தளம் நகரத்தின் சுகாதாரம் சம்பந்தமான விவரணமும் திரையிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--