Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
சிலாபம் பங்கதெனியவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ்ஸின் உதவிச் சாரதி பலியானதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றே இன்று அதிகாலை ஒரு மணியளவில் சிலாபம் பங்கதெனிய பகுதியிலுள்ள லுணுஓயா பாலத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தின்போது, பஸ்ஸின் உதவிச் சாரதி பாலத்தினுள் வீழ்ந்து பலியான நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ் விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025