2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம், உளுக்காப்பள்ளம் முதல் மன்னார், பெரியமடு வரையான பகுதிக்கு புதிய பஸ் சேவை

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ், இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம், உளுக்காப்பள்ளம் முதல் மன்னார், பெரியமடு வரையான பகுதிக்கு புதிய பஸ் சேவையொன்றை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிக துறை அமைச்சருமான ரிசாத் பதியுதீன்,  இன்று ஆரம்பித்து வைத்தார்.

புத்தளம், உளுக்காப்பள்ளத்தில் இன்று காலை ஆரம்பமான இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக், முசலி பிரதேச சபைத்தலைவர் எஹியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப் பஸ்சேவை தினமும் காலை 6  மணிக்கு உளுக்காப்பள்ளத்திலிருந்து பெரியமடு செல்வதுடன் மாலை 3  மணிக்கு பெரியமடுவிலிருந்து உளுக்காப்பள்ளத்திறகு பயணிக்கும்.

இதன்போது உரையாற்றிய  வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில், வணிக துறை அமைச்சருமான ரிசாத் பதியுதீன்,  '20 வருடங்களின் பின்னர் இவ்வாறனதொரு சேவை இடம் பெறுவதானது, மீள்குடிறும் மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .