Kogilavani / 2011 ஜூன் 14 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம் வலய மட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நடைப்பெற்றது.
இதன்போது, மீலாதுன் விழா போட்டி, சைவ நெறி போட்டி, தமிழ் தின போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
புத்தளம் வலய தமிழ் பிரிவுக்கான பிரதிபணிப்பாளர் சியான் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலய பணிப்பாளர் சதாமங்கல சுபசிங்க, கல்வி திணைக்கள அதிகாரிகள், சமூக நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், கல்விக்காக பல உதவிகளினை செய்து வரும் சமூக நம்பிக்கை நிதியத்தினை கௌரவித்து ஞாபக சின்னமொன்று மாவட்ட முகாமையாளருக்கு வழங்கப்பட்டது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago