Menaka Mookandi / 2011 ஜூன் 16 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரத்மல்யாயப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒருவல் உயிரிழந்துள்ளார். புத்தளம், தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஆப்தீன் (வயது 46) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
புத்தளத்திலிருந்து பாலாவியை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியும் பாலாவியிலிருந்து புத்தளத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் கடுமையான காயத்திற்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago