Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 23 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அப்பெண்களிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரையும் அதற்குத் துணையாகவிருந்த சந்தேக நபரின் சகோதரர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிமல் ஷாந்த தெரிவித்தார்.
மிஹிந்தலை மற்றும் அநுராதபுரம் மூன்றாம் எல்லைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைதான பிரதான சந்தேகநபர் தலாவ பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதோடு வியாபாரத்தை முன்னேற்றுவதற்காக பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு அவர்களிடமுள்ள பணம் மற்றும் தங்க ஆபரங்களைப் பெற்றுள்ளார்.
சந்தேக நபர் தனது முதல் திருமணத்தை கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் மாத்தளைப் பிரதேசத்தில் செய்துள்ளதோடு இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகவுள்ளார். இரண்டாவது திருமணத்தை 2010ஆம் ஆண்டு மிஹிந்தலைப் பகுதியில் செய்துள்ளதோடு மூன்றாவது திருமணத்தை இவ்வருடம் அநுராதபுரம் பகுதியில் செய்துள்ளார்.
இத்திருமணங்களை செய்து கொள்வதற்காக சந்தேக நபருடைய பெற்றோரும் துணையாக இருந்துள்ளனர். இரண்டாவது மனைவியிடமிருந்து மோட்டார் வண்டியொன்றும் 75,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளையும் பெற்றுள்ள சந்தேக நபர், மூன்றாவது மனைவியிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தினையும் பெற்றுள்ளார்.
மூன்றாவது மனைவி சந்தேக நபருடைய வியாபார நிலையத்தில் இருக்கும் போது இரண்டாவது மனைவியும் வந்துள்ளமையினாலேயே சந்கே நபரின் திருட்டுத்தனமான திருமணங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago