2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மலர் கண்காட்சியும் விற்பனையும்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியை அதிகளவான மாணவர்களும் மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நேற்று புதன்கிழமை இக்கண்காட்சி ஆரம்பமானது. நேற்றையதினம் வரை சுமார் 5000 நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இன்றையதினமும் அதேயளவான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகி;ன்றது.

பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பின் இக்கண்காட்சி மேலும் ஒரு சில தினங்களுக்கு நீடிக்கப்படுமென ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சியில் பல விதமான அழகிய தாவர வகைளும் பழ வகை மரங்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X