Kogilavani / 2011 ஜூன் 25 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
கண்டக்குழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் வாசிகசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
வடமேல் மாகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ் என்.டி.எம்.தாஹிரின் கோரிக்கைக்கு அமைய வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜயசிங்கவின் 30 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்படி கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ் என்.டி.எம்.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாசிக சாலைக்கான முதலாவது அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், கோட்டக்கல்வி பணிப்பாளர் நூஹூ லெப்பை, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பவுஸ்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025