2021 மே 08, சனிக்கிழமை

புத்தளத்தில் கடமையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு மன்னார் கல்வி வலயத்துக்கூடாக வழங்கப்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)  
புத்தளம் மாவட்டத்தில் கடமையாற்றி வந்த வட மாகாணத்திற்குட்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு புத்தளம் வலய கல்வி பணிமனையூடாக வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல்  அக் கொடுப்பனவு நேரடியாக மன்னார் வலய கல்வி பணிமனையூடாக வழங்கப்படும் என்று புத்தளம் வலய தமிழ் மொழி மூலத்துக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் சியான் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இந்நிதி வடமாகாணத்திலிருந்து வடமேல் மாகாணத்திற்கு அனுப்பப்பட்டு புத்தளம் வலய கல்வி பணிமனையூடாக கொடுப்பனவு வழங்கப்பட்டது. தற்பேது மீள் குடியேற்றம் ஆரம்பித்துள்ள நிலையில் இம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் வலய தமிழ் மொழி மூலத்துக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் சியான் மேலும் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் 350 ஆசிரியர் உதவியாளர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X