2021 மே 12, புதன்கிழமை

கணனி உதிரிப்பாகங்களை திருடியதாக மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

Super User   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

கணனி உதிரிப்பாகங்களை திருடி சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களை ஒக்டோபர் 5ஆம் திகதி வரை சிறுவர் பராமரிப்பு காப்பகத்தில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான தர்ஷிகா விமலசிரி உத்தரவிட்டார்.

திரப்பனை நகரத்தில் வசிக்கும் 16 மற்றும் 17 வயதுடைய மாணவர்களே இவ்வாறு சிறுவர் பராமரிப்பு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான இரு மாணவர்களும் திரப்பனை நகரத்திலுள்ள கணினி பழுது பார்க்கும் நிலையத்திலுள்ள கணினி உதிரிப்பாகங்களை திருடி வீடுகளில் வைத்துள்ளனர்.

இதேவேளை, இவர்கள்  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாடசாலையொன்றிலும் கணனி உதிரிப்பாகங்களை திருடியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

திரப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜீ. எதிரிசிங்கவின் ஆலோசனைப்படி பொலிஸ் அதிகாரி எதிரிசிங்க செனவஜரத்ன சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .