2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

நண்பரின் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டுக்குள்ளானவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                

மதுபோதையில் தனது நண்பர் ஒருவரின் கையடக்கத் தெலைபேசியை திருடிய நபர் ஒருவரை இம்மாதம் 30ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய தர்ஷிகா  விமலசிரி உத்தரவிட்டார்.

நண்பர்களான இருவரும் நுவர வாவிக்குச் சென்று மது அருந்திவிட்டு திரும்பி வரும் போது முறைப்பாட்டாளர் விழுந்து காயப்பட்டுள்ளதோடு அவரை சந்தேகநபர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் கையடக்க தொலை பேசியை திருடியுள்ளதாகவும் இதனால் இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--