2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தில்லையடி உள்ளக வீதியை புனரமைத்து கொங்கிறீட் வீதியாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம், தில்லையடி உள்ளக வீதியை புனரமைத்து கொங்கிறீட் வீதியாக மாற்றும் நடவடிக்கை இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறுபத்தி நான்கு லட்சத்து எழுபதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.

புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை தில்லையடி பிரதேசத்தில் அடுத்த கட்டமாக மேலும் 2 வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக மாற்றப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--