2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நெற்செய்கைக்காக வழங்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
அநுராதபுரம் மஹகனந்தராவ வாவியிலிருந்து பெரும்போக நெற்செய்கைக்காக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாய சங்கங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இம்மாத முற்பகுதியில்  நடைபெற்ற பெரும்போக நெற்செய்கையாளர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுக்கமைய 5ஆம் திகதி நீர்வழங்கல் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் இந் நீர் வழங்கும் திட்டம் ஓரிரு தினங்களில்  நிறுத்தப்பட்டதால் 6000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் அறிவித்தலுக்கமையவே வழங்கப்பட்டுக்கொண்டிருந்த நீர்ப்பாசனம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X