2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மல்வத்துஓயா பெருக்கெடுப்பால் போக்குவரத்து பாதிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்) 

அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை வீழ்ச்சியினால் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதோடு அநுராதபுரம் அழுத்கம பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் மல்வத்து ஓயா ஆற்றின் பாலத்திற்கு மேலாக சுமார் ஐந்து அடி நீர் பாய்கிறது. இதன்காரணமாக அநுராதபுரம் - அழுத்கம பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அழுத்கம, கம்பிரிகஸ்வௌ, அஸறிகம, கிவ்லேகட உட்பட இருபதுக்கு மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து முற்றாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .