2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்: குமரகுருபரன்

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்தார்.

சுமார் 60 தமிழ் அரசியல் கைதிகள் மிதோ தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கைதிகள் உள்ள பகுதியை சோதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சிறைசாலை அதிகரிகள் ஆடைகளை கழற்றுமாறு கேட்டுள்ளனர். இதன் பின்னரே தாக்கியுள்ளதாக கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்.


இது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அநுராதபுர சிறைச்சாலை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில்,

சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டனர். இதன்போதே பதற்ற நிலை ஏற்பட்டதாக கூறினர்.

இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது பலனளிக்கவில்லை. (AB)


  Comments - 0

  • Pottuvilan Monday, 28 November 2011 06:20 PM

    காடைத்தனம் இன்னும் முடியவே இல்ல. கற்றுக்கொண்ட பாடங்கள் குழுவும் இனி இல்ல. தீர்வுதான் என்ன ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .