2021 மே 06, வியாழக்கிழமை

மாரவில பிரதேச விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாரவில பிரதேசத்தில் இன்று புதன்கிழமை பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிந்துள்ளதோடு மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் மாராவில பிரதேசத்தில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருடன் அதன் சாரதியும் படுகாயங்களுக்குள்ளாகி மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இருவரும் மாரவில வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள மாரவில பொலிஸார், இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .