2021 ஜனவரி 27, புதன்கிழமை

நிவாரண பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிலாபம் பிரதேச மக்களுக்காக புத்தளம் மக்களினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டன.

புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மிலின் தலைமையில் சென்ற குழுவினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்களை வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவிடம் கையளித்தனர்.

சிலாபம் சோனக தெரு மஸ்ஜிதில் வைத்து சவரான, ஜயபிம உட்பட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான நிவாரண பொருட்கள் அப் பிரதேச மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .