2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆராச்சிக்கட்டுவ மற்றும் பள்ளம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை மாலை சந்தித்ததுடன் அவர்களுக்கு நிவாரண பொருட்களினையும் வழங்கினார்.

வைரன்கட்டுவ பிரதேச மக்களினை சந்தித்த அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகே மக்களிடம் பாதிக்கப்பட்டதுடன் அரச அதிகாரிகளினால் உடனடியாக நிவாரணங்கள் வழங்கப்பட்டதா என்றும் அவற்றினை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதா? என்ற கேள்விகளினை கேட்டார். இதன்போது அங்கிருந்த மக்கள் கிராம சேவகர் ஊடாக நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றதாக தெரவித்தனர்.

இதே வேளை இங்கு உரையாற்றிய அமைச்சர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக வேறு இடத்தில் வீடுகளினை கட்டுவதற்கு விருப்பமானவர்களுக்கு காணிகளினையும் உதவிகளினையும் வழங்க முடியுமெனவும் தெரிவித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்படுவதினை தவிர்க்க முடியுமென மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது மா, சீனி, பாய், குடை, கூடாரம், அன்றாட பிளாஸ்டிக் பாவனை பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்களடங்கிய பொதிகள் 315 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி பெரேரா, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .